கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் விஸ்வக் சென், நேஹா ஷெட்டி, அஞ்சலி இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி'. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஸ்வக் சென், நேஹா ஷெட்டி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள மூத்த நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பாலகிருஷ்ணா அஞ்சலியைத்தள்ளி நிற்க சொல்லி தள்ளிவிட, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேடையில் படக்குழுவினர் அனைவரும் குரூப் ஃபோட்டோ எடுக்கவிருந்த நிலையில் பாலகிருஷ்ணா இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணா செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதே சமயம் அவர் விளையாட்டாக செய்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர். பாலகிருஷ்ணா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம்அவரின் செயல்பாடுகள் இதே போல் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது