Advertisment

அக்கினேனி குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா; ஒன்று திரண்ட சைதன்யா பிரதர்ஸ்

balakrishna akkineni issue

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவிளையாட்டாகவும் கோபப்பட்டும்சில செயல்களைச் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத்தூக்கி எறிந்தார். பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்தக் குழந்தையை விளையாட்டாகஅடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார். இதுபோன்றுபாலகிருஷ்ணா செய்த பல நிகழ்வுகள் சர்ச்சையாயின.

Advertisment

அந்த வகையில், ‘வீர சிம்ஹா ரெட்டி’படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா பேசியுள்ளது சர்ச்சையைத்தாண்டி குறிப்பிட்ட திரைப்பிரபலங்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள்ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார். இது அக்கினேனி குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாலகிருஷ்ணாவின்பேச்சிற்குஅக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் பங்களிப்புகள் தெலுங்கு சினிமாவில்பெருமை வாய்ந்ததாகவும் அசைக்க முடியாததூண்களாகவும் இருக்கின்றன. அவர்களைதரக்குறைவுசெய்யும்படி நடந்து கொள்வது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்குசமமானது”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக அக்கினேனி குடும்பத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

balakrishna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe