Advertisment

'மாரி ரொம்ப நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை' - மாரி 2 குறித்து மனம் திறந்த பாலாஜி மோகன் 

balaji mohan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நடிகர் தனுஷ் - சாய்பல்லவி இணைந்து நடித்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாரி 2' . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட பாலாஜி மோகன் பேசும்போது... "முதலில் மாரி படத்தை நான்தான் எடுத்தேன், காதலில் சொதப்புவது எப்படி படமும் நான்தான் எடுத்தேன். இப்போது மாரி 2வையும் நான்தான் எடுத்தேன். வெளியே இதை யாரும் நம்பமாட்டுகிறார்கள். அதனால் இதை இங்கே தெளிவுபடுத்துகிறேன். மாரி ரொம்ப நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை. இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்களை தந்துள்ளார். மேலும் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள டோவினோ மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் சாய்பல்லவி, ரோபோ சங்கர், வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டிசம்பர் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெரும்" என்றார்.

Advertisment

DHANUSH maari2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe