பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்த வந்த நிலையில் சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடத்தி, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில்அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதுகிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் அருண் விஜய் சேரும் சகதியுமாக ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மறுகையில் பிள்ளையார் சிலையுடனும் நிற்கிறார். இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், படக்குழு தற்போது போஸ்டரை பகிர்ந்து படக்குழுவை பற்றி குறிப்பிட்டுள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கின்றனர். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப்பணிகளை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத்தொடர்ந்து விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலா ஸ்டைலில்வித்தியாசமானஇந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகிறது.