Advertisment

பிரபல காமெடி நடிகரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த பாலா!

Bala sponsored the famous comedian's vengal rao treatment!

Advertisment

80 காலக்கட்டத்தில் சினிமா ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தவர் வெங்கல் ராவ். இவர், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்துள்ளார்.

சண்டை காட்சிகளில் நடிக்கும்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டண்ட் செய்வதில் இருந்து விலகி நடிகரானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வெங்கல் ராவ், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இவரும், வடிவேலுவும் இணைந்து நடித்தபல காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனது கை, கால் செயலிழந்துவிட்டதாகவும், அதனால் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு வெங்கல் ராவ் வெளியிட்டார்.

Advertisment

Bala sponsored the famous comedian's vengal rao treatment!

இந்த நிலையில், சின்னத்திரை காமெடி நடிகர் பாலா, வெங்கல் ராவுக்கு நிதியுதவி அளித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக செய்தி கேட்டு மனசு கேட்கவில்லை. அதனால், என்னால் முடிந்த ரூ.1 லட்சம் அவருக்கு அனுப்பி இருக்கேன். உங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்யுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்து வெங்கல் ராவ் கூகுள் பே நம்பரை பகிர்ந்துள்ளார். மேலும் அவர், வெங்கல் ராவ் குணமடைந்து மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் அவரை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும்கூறினார்.

comedian bala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe