ADVERTISEMENT

பிரபல காமெடி நடிகரின் தந்தை கரோனாவால் மரணம்!

01:25 PM Jun 11, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் பால சரவணன், பின்னர் ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘ஒருநாள் கூத்து’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன், கரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT