Advertisment

"நான் நடிகனாக இருக்க இதுதான் காரணம்" - பால சரவணன்

bala saravanan talk about kana kanum kalangal

Advertisment

கடந்த 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது.இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த தொடர் மீண்டும் புதிய நட்சத்திரங்களுடன் உருவாகி வருகிறது. இதில் தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பி.டி மாஸ்டராக நடிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார்.

பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த வெப் சீரீஸின்கதை. இந்த வெப் தொடர் வரும் 22 ஆம் தேதி முதல்டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது.

Advertisment

இதன் முந்தைய தொடரில் நடித்து பிரபலமான நடிகர்பால சரவணன்,"கனா காணும் காலங்கள், இந்த பெயரை கேட்டவுடன் உள்ளூர ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. எனக்கு பல கனவை நனவாக்கி தந்தது இந்த தொடர் தான். நான் நடிகனாக இருக்க காரணம் இந்த தொடர் தான். எங்களுக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ அதே போல் இந்த புதிய தொடருக்கும் ஆதரவு தாருங்கள்" எனத்தெரிவித்துள்ளார்.

bala saravanan
இதையும் படியுங்கள்
Subscribe