/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/unnamed_12.jpg)
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறைரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, மெட்ரோ ரயில் சேவைக்குஅனுமதி, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, 75 நபர்கள் மிகாமல் திரைப்பட படப்பிடிப்பு நடத்தலாம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கிடையே கரோனா முடக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதற்கு பல்வேறு திரைபிரபலங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பால சரவணன் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்....
"திரை அரங்கம் சினிமா தொழிலாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்வின் மிக மிக முக்கியமான அங்கம்... அரசின் பாதுகாப்பு விதிகளுடன் திரை அரங்கங்களை திறக்க வேண்டுகிறோம்...#SupportMovieTheatres????????????????????" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)