Advertisment

பாலா செய்த உதவி - நெகிழ்ந்து போன கிராம மக்கள்

bala helped Chengalpattu people

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில்பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிகப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்தார். 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாரட்டை பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் மீண்டும் பாலாவின் செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக அந்த கிராம மக்கள் பாலாவிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், இங்குள்ள நிலத்தடி நீரில் அதிகளவு சுண்ணாம்பு கலந்திருப்பதால் சிறுநீரக பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படுகிறதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

இதையடுத்து மக்களின் கோரிக்கையை புரிந்து கொண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா. இதனால் அக்கிராம மக்கள் பாலாவிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

bala Chengalpattu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe