Skip to main content

அவதிப்பட்ட மக்களுக்கு உதவிய பாலா

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
bala gives ambulance to tirupathur district peoples

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். அண்மையில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாமலும், உடல் நலத்தால் பாதிக்கப்படுவோர் 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் டோலி கட்டி செல்லும் நிலை இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பாலா ஆம்புலன்ஸ் உதவியை செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல காமெடி நடிகரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த பாலா!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Bala sponsored the famous comedian's vengal rao treatment!

80 காலக்கட்டத்தில் சினிமா ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தவர் வெங்கல் ராவ். இவர், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்துள்ளார். 

சண்டை காட்சிகளில் நடிக்கும்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டண்ட் செய்வதில் இருந்து விலகி நடிகரானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வெங்கல் ராவ், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இவரும், வடிவேலுவும் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனது கை, கால் செயலிழந்துவிட்டதாகவும், அதனால் உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு வெங்கல் ராவ் வெளியிட்டார். 

Bala sponsored the famous comedian's vengal rao treatment!

இந்த நிலையில், சின்னத்திரை காமெடி நடிகர் பாலா, வெங்கல் ராவுக்கு நிதியுதவி அளித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக செய்தி கேட்டு மனசு கேட்கவில்லை. அதனால், என்னால் முடிந்த ரூ.1 லட்சம் அவருக்கு அனுப்பி இருக்கேன். உங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்யுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்து வெங்கல் ராவ் கூகுள் பே நம்பரை பகிர்ந்துள்ளார். மேலும் அவர், வெங்கல் ராவ் குணமடைந்து மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் அவரை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார். 

Next Story

ரிலீஸுக்கு ரெடியான பாலாவின் வணங்கான்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
vanangaan release update

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே மலையாள நடிகை மமிதா பைஜு, இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் பகிர்ந்திருந்தார். அது கோலிவுட்டில் சற்று பரபரப்பை எற்படுத்த பின்பு “நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என விளக்கமளித்திருந்தார். 

இந்த நிலையில் இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலையில் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாலா, அருண் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12ல் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.