Skip to main content

துருவ் விக்ரமின் தோற்றத்தை மாற்றிய பாலா! 

Published on 08/03/2018 | Edited on 09/03/2018


விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பாலா இயக்குகிறார். இந்நிலையில் தனது மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார். இதையடுத்து இப்படத்திற்காக துருவுக்கு தனி அடையாளம் கொடுத்து, தாடி மீசையுடன் அடையாளமே தெரியாமல் மாறிய கெட்டப்பை அமைத்தார் இயக்குனர் பாலா. அப்போது புது கெட்டப்புடன் இருக்கும் தன் மகனின் நடிப்பை பார்த்து நெகிழ்ந்த விக்ரம் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
 

சார்ந்த செய்திகள்