bala and lawrence helped women by buying auto to her

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ், தனது சொந்த பணத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கியுள்ளார்.

Advertisment

சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இனைந்து திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ராகவா லரன்ஸ் மற்றும் பாலா இருவரும் இணைந்து கணவரை இழந்த பெண்மணிக்கு ஆட்டோ வாங்கி பரிசாக கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை இருவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

bala and lawrence helped women by buying auto to her

மேலும் அந்த பெண்மணி பற்றிய தகவலை பாலா தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இந்த சகோதரியின் பெயர் முருகம்மாள். திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கணவனை இழந்தவர். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மின்சார இரயிலில் சமோசா விற்று தான் குடும்பத்தை கவனித்து வருகிறார். புதிய ஆட்டோ வாங்கி அவரே அதை ஓட்ட வேண்டும் என்பது அவரது கனவு. இது என்னை மிகவும் பாதித்தது . எனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் நாங்கள் அதை செய்தோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment