துப்பாக்கி முனை படத்திற்கு பின் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘அசுரகுரு’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாட்டை புகழ் மகிமா நம்பியா நடித்திருக்கிறார். இந்த படத்தை ராஜ்கீத் இயக்கி உள்ளார். ஏ.எஸ்.பி.சதீஷ் தயாரித்துள்ளார்.

Advertisment

bakyaraj

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் பாக்யராஜ், “விக்ரம் பிரபு முன்னணி கதாநாயகனாக வரவேண்டியவர். என்ன காரணத்தினாலோ அந்த இலக்கை இன்னும் அடையவில்லை. அவர் மேலும் உயரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் வாரிசுகள் சுலபமாக வந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் வாரிசுகள் சுலபமாக வெற்றிபெற முடியவில்லை. எனது மகன் சாந்தனு, பாண்டியராஜ் மகன் பிரித்வி ஆகியோரை குறிப்பிட்டுத்தான் இதை நான் பேசுகிறேன்” என்று கூறினார்.

Advertisment

அண்மையில்தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதைதான் பாக்யராஜ் மேடையில் பேசும்போது கலாய்த்திருக்கிறார் என்று பலர் பேசுவருகின்றனர்.