Skip to main content

ஏ.ஆர். முருகதாஸ், அட்லி, விஜய் சேதுபதி, ஆர்யா, அனிருத் வாழ்த்திய பக்ரீத் !

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
bakrith

 

 

எம்10 புரொடக்சன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரித்து வரும் படம் 'பக்ரீத்'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். டி இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார்.  திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராகவும், மதன் கலை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Next Story

ஆடியோ லாஞ்ச் அப்டேட் கொடுத்த ‘லால் சலாம்’ படக்குழு

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
lal salaam audio launch update

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து ‘தேர்த் திருவிழா’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் பிப்ரவரி 9ல் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மாலை 4 மணி முதல் விழா தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.