Skip to main content

ஆலங்குருவிகளை வெளியிடும் விக்ராந்த்தின் பக்ரீத் 

Published on 06/03/2019 | Edited on 06/03/2019
bakrid

 

 

எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரிக்கும் 'பக்ரீத்' படத்தில் நாயகனாக விக்ராந்த், நாயகியாக வசுந்தரா நடித்து வருகின்றனர். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்படத்தின் 'ஆலங்குருவிகளா' என்ற சிங்கிள் டிராக் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளனர். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளி வளாகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்..! (படங்கள்)

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

இஸ்லாமியர்களின் தியாக திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பதை இல்லாதவருக்கு கொடுப்பதை மையக்கருத்தாக கொண்டுள்ள பக்ரீத் பண்டிகையின்போது நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அந்தவகையில், சென்னை பாரிஸில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

Next Story

பக்ரீத் பண்டிகை: மத்திய விலங்குகள் நலவாரியம் அதிரடி உத்தரவு!

Published on 10/08/2019 | Edited on 11/08/2019

பக்ரீத் பண்டிகையை வருகின்ற திங்கட்கிழமை கொண்டாட இந்தியா முழுவதும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் கால்நடை துறை ஒரு உத்தரவை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியிருக்கிறது. 

அந்த உத்தரவில்,

 

bakrith festival: Central Veterinary  Order

 

பலியிடப்படும் விலங்குகளில், பசு மாடு, மற்ற விலங்குகள் எக்காரணத்தைக் கொண்டும் கொல்லக் கூடாது. ஒட்டகத்தை எக்காரணத்தைக் கொண்டும் கொல்லக் கூடாது. இதுதொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. கொல்லப்படும் மற்ற விலங்குகள் கூட உணவுக்காக கொல்லப்படுகிறது என்றால், அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. 

animal welfare



மசூதிகளில் அல்லது கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் பொது இடங்களில் வைத்து விலங்குகளை வெட்டக்கூடாது. விலங்குகள் வெட்டுவதற்கு முன்பு அந்த விலங்கு கருவுற்றதாக இருக்கக் கூடாது. கன்று ஈன்று மூன்று மாதங்கள் ஆன விலங்குகளை வெட்டக்கூடாது. விலங்கு வெட்டப்படுவதற்கு முன்பு கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சான்றிதழ் வாங்கிய பிறகுதான் வெட்டப்படவேண்டும். அதற்கென நியமிக்கப்பட்ட வெட்டு கூடங்களில்தான் விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில அரசுகள் இந்த விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என  மத்திய விலங்குகள் நலவாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுபவர்களை மத்திய அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.