/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_16.jpg)
பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில், இளம் தலைமுறையினர் சில காரணங்களால் தவறான பாதையில் செல்கிறார்கள், அந்த தவறுகளுக்குப் பின்னால் இருக்கும் கும்பலைக் கண்டுபிடித்து செல்வராகவன் பழிவாங்குவது போல் தெரிகிறது. மேலும் ட்ரைலரில், "இந்த தப்பு பண்ணவங்கள் எல்லாம் சாக வேண்டியவங்க தான். ஆனா இப்படியில்ல... அசிங்கப்பட்டு சாகவேண்டும்" என்ற வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)