Bakasuran release announcement

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தின் வெளியிட்டு தேதியை குறிப்பிடாமல், நவம்பர் மாதம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment