'bakasuran' movie update released by mohan.g starring selvaraghavan

Advertisment

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமானவர் மோகன்.ஜி. இதனை தொடர்ந்து தற்போது 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்.ஜி தெரிவித்து இது தொடர்ப்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதோடு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.