/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1689.jpg)
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமானவர் மோகன்.ஜி. இதனை தொடர்ந்து தற்போது 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகை முடிக்க வருகிறான்பகாசூரன்என்று குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் செல்வராகவன் உடம்பில் பட்டை கழுத்தில் ருத்தராட்சம்அணிந்து கிட்டத்தட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கார்த்தியின் கெட்டப் போன்ற ஒரு தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் படக்குழு இந்த போஸ்டருடன் பரகாசூரன்படத்தின் டீசர் வரும் 28 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)