Bailwan and producer Rajan heated argument in katchikkaaran movie audio launch

ப.ஐயப்பன் இயக்கத்தில் சரவணன் செல்வராஜ் தயாரிப்பில் விஜித் சரவணன், ஸ்வேதா டோரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கட்சிக்காரன்'. இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13.12.2022) நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தயாரிப்பாளர் மற்றும் சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்தலைவர்கே.ராஜன் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட நடிகர் பயில்வான் ரங்கநாதன் கே.ராஜனுடன் வாக்குவாதம் செய்தார்.

Advertisment

அப்போது மேடையில் இருந்தபடியே பேசிய ராஜன், "இங்க உங்களுக்குப் பதில் சொல்ல நான் வரவில்லை. நீங்க கேள்வி கேட்க வரல. நீ கேட்க வேண்டிய நேரம் இது இல்லை. வா... தனியா பேட்டி வைத்துக்கொள்ளலாம். அங்கே இரண்டு பேரும் பேசிக்கொள்ளலாம்" எனச் சொல்லியிருந்த சமயத்தில் "இப்பொழுதே ரெடி" எனப் பதிலளித்தார் பயில்வான் ரங்கநாதன்.

அதற்கு கே.ராஜன், "இங்க என்னா ரெடி. இது அதற்கான மேடை இல்லை. இது என் தயாரிப்பாளர் போட்ட மேடை. எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையபத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் நடிகைகளையும் கேவலப்படுத்திக்கிட்டு இருக்க. பெட்ரூமை பத்தியே பேசுற" எனப் பேசினார்.

பின்பு இருவருக்கும் வாக்குவாதம் முற்றஒருவருக்கொருவர் அடிக்க முயன்றனர். பயில்வான் ரங்கநாதனை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். பின்பு தொடர்ந்து மேடையில் பேசிய கே.ராஜன், தகாத வார்த்தையில் பயில்வான் ரங்கநாதனை திட்டினார். உடனே அருகில் இருந்தவர்கள் ராஜனுக்கு தண்ணீர் கொடுத்தனர். அப்போது ராஜன், "அவங்களுக்கு தண்ணீ காட்றதுதான் என் வேலை. அனுமதி இல்லாமல் இங்கே அவர் வந்துள்ளார்" எனக் கோபமாகப் பேசினார்.

தயாரிப்பாளர் கே.ராஜனும் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோத முயன்ற சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.