Advertisment

அனிமேஷன் சீரிஸாக வெளியாகும் பாகுபலி

bahubali to come in animation series

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றபடம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Advertisment

இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெயாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படட்தின் முன் கதை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் பாகுபலி மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையில் அறியப்படாத பல திருப்பங்களையும், மகிஷ்மதியை பற்றியதாகவும் உருவாகியிருக்கிறது. இந்த சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

web series ss rajamouli bahubali 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe