Advertisment

சீனாவிலும் முதல் நாள்  வசூல் வேட்டை நடத்திய பாகுபலி -2

பாகுபலி 2 சென்றாண்டு வெளியாகி இந்திய சினிமாவில் இல்லாதபல உலகவசூல் சாதனைகளை படைத்தது. இந்நிலையில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுவந்த இப்படம்,நேற்று சீனாவில் 7000 திரையரங்கில் வெளியானது. மேலும் அங்கு முதல் நாள் வசூலாக 2.85 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில்19 கோடியாகும், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியான பாகுபலி முதல் பாகத்தின் மொத்த வசூலான 1.18 மில்லியன் டாலரையும் அதையும் விட அதிகமானவசூலைமுதல் நாளிலே செய்துள்ளது.

Advertisment

bahubali 2 china box office

மேலும் அமீர் கானின் 'டங்கல்', சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' ஆகிய இரண்டு படங்களின் முதல் நாள் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் சீனாவில் முதல் நாளில்அதிக வசூலித்த திரைப்படங்களின் வரிசையில் அமீர்கான் தயாரிப்பில் வெளியான 'சீக்ரட் சூப்பர்ஸ்டார்' 6.74 மில்லியன் வசூலித்து முதலிடத்திலும், இர்ஃபான் கான் நடிப்பில் வெளியான 'ஹிந்தி மீடியம்' மூன்று மில்லியன் டாலர் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பாகுபலி2, தங்கல்,பஜ்ரங்கி பைஜான் உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த வசூலில் முதல் இரண்டு இடங்களில் சீனாவில் அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மற்றும் தங்கல் உள்ளது.

Advertisment
bahubali 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe