Advertisment

''அவரை பாராட்டுவதா, இல்லை பயப்படுவதா என்று தெரியவில்லை'' - பாக்யராஜ் குழப்பம்!

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர், இயக்குனர் பாக்யராஜ் பார்த்திபன் குறித்து பேசியபோது....

Advertisment

bagyaraj

''எனது உதவியாளர்கள் பார்திபனும், பாண்டியராஜனும் இங்கும், வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை அனுப்பியும் விருதுகளை வாங்கி விட்டார்கள். ஆனால் நான்தான் இன்னும் ஒரு விருதும் வாங்கவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் வாங்கும் விருதுகள் எனக்கு கிடைத்துபோல் நினைத்துக்கொள்கிறேன். படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதா அல்லது துணிச்சலை நினைத்து பயப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவிதமான உணர்ச்சிகளையும் காட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தமிழ்ப் படவுலகுக்கு மட்டுமின்றி இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்க்கும் படம் இது'' என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/VeJJeIXguAI.jpg?itok=x1n_V5iE","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Oththa Serupu Size 7 k.bagyaraj kbaghyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe