Advertisment

ஓவியா படத்தின் டீஸரை வெளியிட்ட கே.பாக்யாராஜ்

oviya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

'இமாலயன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் 'ஓவியா'.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார். இந்நிலையில் 'ஓவியா' படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்கள் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல்பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

kbaghyaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe