Advertisment

''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட் 

கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சினிமாத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் பாக்யராஜ் ரஜினி குறித்து பேசியபோது...

Advertisment

bagyaraj

''சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் தான் ஒரு பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்று எண்ணியகாலத்தில் அதை நிறைவேற்றி வைத்தவர் கதாசிரியர் கலைஞானம். அது பைரவி மூலம் ஆரம்பமானது. 16 வயதினிலே பட சமயத்திலே நான் ரஜினி என்ற ஹீரோவை கண்ணால் பார்த்தவன். அந்த படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கு நான்தான் சீன் சொல்லுவேன். அப்போது அவருக்கு அந்த அளவு தமிழ் தெரியாது. பல முறை என்னை வசனத்தை சொல்லச்சொல்லி கேட்டுக்கொள்வார். பிறகு நான் சென்றவுடன் சுவற்றை பார்த்து, மரத்தை பார்த்து வசனத்தை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பார். இவர் எத்தனை முறை இப்படி செய்கிறார் என்று பார்த்தால் அந்த ஷாட் எடுக்கும் வரை ஒத்திகை பார்த்துக்கொண்டே இருப்பார். ஏன் இதை சொல்கிறேன் என்றால் ரஜினி சும்மா ஒன்றும் சூப்பர்ஸ்டார் ஆகிவிடவில்லை. அப்போதிலிருந்தே அவரிடம் இதற்குண்டான ஸ்பார்க், உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்ததால்தான் அவர் இன்றும் சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார். இதையெல்லாம் நான் அப்போது கண்கூர்ந்து பார்த்தவன்'' என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/BVlC-mPH4a4.jpg?itok=0sZxp9I1","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Actor Rajinikanth k.bagyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe