prabas

Advertisment

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி நேற்று படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு நாடுகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பிரபாஸ் நடிக்கும் இந்த புதிய படத்தின் அறிவிப்பும் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.