RJ Balaji

அமித் ஷர்மா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரோனா, சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் பதாய் ஹோ. இந்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் சானியா மல்கோத்ரா நடித்த கதாபாத்திரத்தில் சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளியும் நடிக்கின்றனர்.

Advertisment

'வீட்ல விசேஷங்க' எனத் தமிழில் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் கோவையில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

வரவிருக்கும் மாதங்களில் கரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் துரிதமாகப் படப்பிடிப்பை நிறைவுசெய்யும் நோக்கோடு படக்குழு வேகங்காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.