
சூசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து அப்படத்தின் டப்பிங்கையும் முடித்தார் சிம்பு.
அதனை தொடர்ந்து சிம்பு, கடந்த நவம்பர் 9ஆம் தேதி பாண்டிச்சேரியில், மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் சிம்பு.
Thank you team.. Glad and stunned to see the transformation of our thambi @SilambarasanTR_ very inspiring. May he continue to inspire many. Loves to al ❤ https://t.co/kuzZxtEICj
— badava gopi Actor (@badavagopi) November 10, 2020
தற்போது இந்த மாநாடு படத்தில் சிம்புவுடன் நடித்திருக்கும் நடிகர் படவா கோபி, சிம்பு குறித்து பதிவிடுகையில், “குழுவிற்கு நன்றி.. எங்கள் தம்பி சிலம்பரசனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து திகைத்துப் போனேன். மிகவும் உத்வேகமாக உள்ளது, அவர் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.