Advertisment

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்கள்!

Back to Back blockbusters from Prabhas

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பிரம்மாண்ட படங்களின் நாயகன் பிரபாஸ் நடித்திருந்ததாலேயே அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதால் ‘கல்கி 2898 ஏடி’ திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்க் படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kalki 2898 AD movie prabhas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe