/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bachelor.jpg)
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் என்பவர்‘பேச்சிலர்’ எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்க திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்கின்றார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். கரோனா அச்சுறுத்தலால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதன்பின் தமிழக அரசு வழங்கிய அனுமதியை அடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, நேற்று முழு ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது.
மேலும் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் இயக்குனரும், நடிகருமானமிஷ்கின் நடித்துள்ளார். இவருடைய காட்சிகளை 4 நாட்கள் படமாக்கியுள்ளது படக்குழு என்று தகவல் முன்பு வெளியானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)