சௌந்தரராஜா - தமன்னா தம்பதிக்கு குழந்தை பிறந்தது

baby was born to the Soundaraja Tamanna couple

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சௌந்தரராஜா. இவர்விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’, சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="25ca3cfa-7052-4465-abf7-ed13082a9589" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_7.jpg" />

இதனிடையே, கடந்த 2018ஆம் ஆண்டுநடிகர்சௌந்தரராஜா, தமன்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நேற்று (14.11.2021) பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, “குழந்தைகள் தினத்தில் எனக்குப் பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது” என்றார். மேலும், நேற்று பிறந்த தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe