Baby John collection details

இயக்குநர் ஏ.காளீஸ்இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபிஜான்'. தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியான 'தெறி' திரைப்படத்தின்ரீமேக்கானஇப்படத்தில் நடிகர் வருண்தவான்கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ்,வாமிகாகபி, ஜாக்கிஷெராப்,ராஜ்பால்யாதவ், மணிகண்டன், பி.எஸ்.அவினாஷ்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தைஜியோஸ்டுடியோஸ்,சினிஒன்ஸ்டுடியோஸ்மற்றும் இயக்குநர்அட்லியின்தயாரிப்பு நிறுவனமான ஏஃபார்ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதிபேபிஜான்திரைப்படம் வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின்டீசர்,டிரெய்லர்மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும்வரவேற்பைபெற்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானபேபிஜான்திரைப்படம்கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ. 11.25 கோடி வசூல்செய்துள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது.