Advertisment

விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்!

dtjdz

விஜய்-அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய 'குருவி', பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55 ஆகும். இவரின் இந்த திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe