Skip to main content

ரூமுக்கு பொண்ண அனுப்பவா? - கேட்டது ஒன்னு; புரிஞ்சது ஒன்னு - பப்லூ ப்ரித்திவிராஜ் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Babloo Prithiveeraj

 

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகர் பப்லூ ப்ரித்திவிராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், ஒரு தெலுங்கு திரைப்பட ஷூட்டிங்கின்போது தனக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியிருந்த எனக்கு, ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதலில் நடிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். கதை ரொம்பவும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். அந்த ஷூட்டிங்கின்போது என்னை ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள். அங்கிருந்த ஜிம்மை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அறையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஜிம்மிற்கு சென்றால் ஜிம் குடோன் மாதிரி இருந்தது. நிறைய பொருட்களை அங்கு போட்டு வைத்திருந்தார்கள். அங்கிருந்தவரிடம் கேட்டபோது அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு பண்ணுங்க சார் என்றார். நான் ஓர்க்அவுட் பண்ணாமல் திரும்பிவந்துட்டேன். 

 

பின்னர், இரவு அந்தப் பட மேனேஜருக்கு போன் செய்தேன். நான் ரொம்ப டெஸ்பரேட்டா இருக்கேன் என்று சொன்னேன். அவர் சாரி சொல்லிவிட்டு நீங்க அப்படி இல்லனு நினைச்சோம் சார் என்றார். நான் ஏன் அப்படி இல்லை, நான் மட்டுமில்லை என் அப்பாவும் அப்படித்தான் என்றேன். சாரி சார், இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்ல, கொஞ்சம் பணம் செலவாகும் பரவாயில்லையா என்றார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, இந்த விஷயத்தில் நான் காசு பார்க்கமாட்டேன் என்றேன். நீங்க போறீங்களா சார், இல்ல அவங்களை வரச் சொல்லனுமா என்றார். எனக்கு ஒன்னும் புரியவில்லை.

 

நான் எங்க போகணும், நீங்க எதைப் பத்தி பேசுறீங்க என்று கேட்டேன். அவர் நீங்க எதைப் பத்தி பேசுனீங்க என்று கேட்டார். நான் ஜிம் பத்தி பேசுனேன் என்று சொன்னதும் சார் நைட்டு பதினோறு மணிக்கு போன் செய்து நான் டெஸ்பரேட்னு சொன்னால் எல்லோரும் என்ன சார் புரிஞ்சிப்பாங்க என்றார். ஐயோ நான் அப்படியெல்லாம் இல்லப்பா என்றேன். எங்க அப்பாவும் அந்த மாதிரிதானு சொன்னீங்க சார் என்றார். எங்க அப்பாவும் ஜிம் போவாருப்பா என்று அவருக்கு விளக்கமா எடுத்துக்கூறினேன். ஜிம்தான சார், நாளைக்கு கண்டிப்பா ஏற்பாடு பண்ணுறேன், இப்ப தூங்குங்க என்றார். இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”என் பையனுக்கு அது மட்டும் நடக்கலனா, இன்னைக்கு நான்...” - எட்டு வருட மன உளைச்சலை விளக்கும் பப்லூ ப்ரித்திவிராஜ்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Babloo Prithiveeraj

 

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகர் பப்லூ ப்ரித்திவிராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”என்னை நடிகராக்க வேண்டும் என்று என் அப்பா முடிவெடுத்துவிட்டதால் சின்ன வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அப்போது எனக்கு நடிப்பெல்லாம் தெரியாது. ஷூட்டிங் போனால் ஹோம் ஒர்க் எழுத வேண்டாம், ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தை நட்சத்திரமாகவே 30 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டேன். நாளை நமதே படம் ரிலீஸானதற்குப் பிறகு நீதான சின்ன எம்.ஜி.ஆர் என்று எல்லோருமே கேட்க ஆரம்பித்தார்கள். நான் எம்.ஜி.ஆரை செட்டில் பார்த்திருக்கிறேன். ஆள் கம்பீரமாக இருப்பார். அவரோடு என்னை ஒப்பிட்டது ரொம்பவும் பிடித்திருந்தது. அதன் பிறகுதான், அப்பா சொன்னதுபோல நடிகராலாம் என்று முடிவெடுத்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 250 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டேன். நிறைய சீரியல்ஸிலும் நடித்திருக்கிறேன். ஷோ ஆங்கரிங்கூட பண்ணியிருக்கேன். சினிமாவில் எவ்வளவு பிஸியான நடிகராக இருந்தாலும், ஒருகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். யாரிடமிருந்தும் போன் வராது. ரோட்டில் பார்ப்பவர்கள் என்ன சார் அவ்வளவுதானா, படமெல்லாம் இல்லையா என்று கேட்பார்கள். அஜித்துடன் நடிச்சீங்க அவர் எங்கயோ போய்ட்டார், நீங்க ஒன்னுமே இல்லாம இருக்கீங்க என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இது எல்லாருக்குமே நடக்கக்கூடியதுதான். எனக்கு இதுதான் தெரியும், நான் இப்படித்தான் நடிப்பேன் என்று நினைக்க ஆரம்பித்தால் மட்டுமே சினிமா நமக்கு போரடிக்க ஆரம்பிக்கும். தினமும் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வாய்ப்பு இல்லாத போதும் ஜாலியாகத்தான் இருக்கும். 

 

ஒருகட்டத்தில் தெலுங்கில் ரொம்பவும் பிஸியான நடிகராக இருந்தேன். நந்தி விருதுகூட வாங்கினேன். என் பையனுக்கு இரண்டரை வயது இருக்கும்போது ஆட்டிசம் குறைபாடு இருப்பது தெரியவந்தது. அதுவரை வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டிருந்த நான், சாதிச்சு என்ன செய்ய, ஜெயித்து என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். உங்க அப்பா நிறைய பணம் சம்பாதிச்சிருக்கேன், நந்தி அவார்டெல்லாம் வாங்கியிருக்கேன் என்று சொன்னால் அவனுக்கு புரியுமா? அடுத்த எட்டு வருடங்கள் கடும் மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து மீண்டுவருவது ரொம்பவும் சவாலாக இருந்தது. தெலுங்கில் உச்சத்தில் இருந்தபோது சினிமாவே வேண்டாம் என்று சென்னை வந்துவிட்டேன். அதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால் தெலுங்கில் இன்றைக்கு பெரிய நடிகராக இருந்திருப்பேன். தற்போது சில படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கிறேன்”.