Ayyappanum Koshiyum

Advertisment

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த படம் 'அய்யப்பனும் கோஷியும்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பிற மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்யக்கடும் போட்டி நிலவியது. இதற்கு மத்தியில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க பவன் கல்யாண்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதுமே, பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது யார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை சாகர் கே.சந்திரா இயக்க, தமன் இசையமைக்கிறார்.

இத்தகவல் தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.