ayyapanum koshiyum

Advertisment

இந்த வருட தொடக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படத்தில் கோஷியாக ப்ரித்விராஜும் அய்யப்பான பிஜூ மேனனும் நடித்து அசத்தியிருந்தனர்.

இருவருக்குள் இருக்கும் ஈகோ, அதனால் நடைபெறும் பிரச்சனைகள் இதுதான் இந்தப்படத்தின் கரு. மூன்று மணி நேரம் நீண்ட படமாக இருந்தாலும் அலுப்பு இல்லாமல் வேகமாகச் செல்லக்கூடிய படம்.

இந்நிலையில் இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு வருவதாகப் பல தகவல் வெளியாகி வந்தன. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் சசி குமாரை நடிக்க வைக்கவும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது.