Advertisment

இந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...

john

Advertisment

இந்த வருட தொடக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் கோஷியாக ப்ரித்விராஜும், அய்யப்பான பிஜூ மேனனும் நடித்து அசத்தியிருந்தனர்.

இருவருக்குள் இருக்கும் ஈகோ, அதனால் நடைபெறும் பிரச்சனைகள் இதுதான் இந்தப்படத்தின் கரு. மூன்று மணி நேரம் நீண்ட படமாக இருந்தாலும் அழுப்பு இல்லாமல் வேகமாக செல்லக்கூடிய படம்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக பல தகவல் வெளியாகி வந்தன. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் சசி குமாரை நடிக்க வைக்கவும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

தற்போது இதன் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பதிவில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது ஜே.ஏ என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். யார் நடிக்கிறார்கள், யார் இயக்குனர் என்பதை எல்லாம் ஜான் ஆபிரஹாம் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

john abraham
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe