
மலையாள சினிமாவில் பிரபல கதாசிரியர் சச்சி. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
'சாக்லெட், ராபின் ஹூட், மேக்கப் மேன், சீனியர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு சேது என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் சச்சி. இறுதியாக 'டபுள்ஸ்' படம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்த இணைபிரிந்தது. 2015ஆம் ஆண்டு ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் சச்சி.
சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஜூபிளி மிஷன் மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி சச்சி மறைந்துவிட்டார். இந்தச் செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)