surya jothika

Advertisment

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர்அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளை இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தைபிரத்யேகமாக அமேசானில் பிரபலங்களுக்கு வெளியிட்டுள்ளது அமேசான். தற்போது இந்தப் படத்தின்புரொமோஷனுக்காக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்துபேட்டி அளித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் பிரபலஆங்கிலசினிமா பத்திரிகையாளரான ராஜிவ் மன்சத்திற்கு பேட்டி அளிக்கும்போது இருவரும் ஆயுஷ்மான் குரானா படங்களைப் பாராட்டியிருந்தார்கள். அதற்குஆயுஷ்மான் குரானாட்விட்டரில் இருவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.