Skip to main content

உதவி செய்தலே கதையின் கரு - அயோத்தி படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Ayothi movie team interview

 

சமீபத்தில் வெளியாகி அனைவருடைய பாராட்டையும் கவனத்தையும் பெற்று வரும் 'அயோத்தி' படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் படக்குழுவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஒரு சந்திப்பு...

 

சசிகுமார்: அயோத்தி படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உதவி செய்வது தான் இந்தப் படத்தின் கரு என்பதைக் கதை கேட்கும்போது அறிந்தேன். அதுதான் நான் இந்தக் கதையை ஒப்புக்கொள்வதற்கான காரணமாக இருந்தது. இப்போது அதற்கு மக்களின் ஆதரவும் பெருகுவதைக் கண்டு மகிழ்ச்சி.

 

இயக்குநர் மந்திரமூர்த்தி: முதல் படமாக நிச்சயம் நல்ல கதையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. நாங்கள் கதை எழுத ஆரம்பித்தபோது நிகழ்கால நிகழ்வுகளோடு அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதெல்லாம் சமீபத்தில் நிகழ்ந்தது தான். கேமராமேன் என்பவர் இயக்குநருடைய நண்பராக இருந்தால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதை இந்தப் படத்தில் நான் உணர்ந்தேன். 39 நாட்கள் எடுக்கப்பட்ட ஒரு படம் போல் இது தெரியவில்லை. அவ்வளவு தரமாக இருந்தது. எங்களுக்குள் எந்த ஈகோவும் இருக்காது. இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. இசையமைப்பாளர், எடிட்டர் என்று அனைவருடைய சிறப்பான ஒத்துழைப்பும் இந்தப் படத்திற்கு இருந்தது. அஞ்சு மேடம் செய்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது. ஆனால் அவ்வளவு சிறப்பான ஒத்துழைப்பை எங்களுக்கு அவர் வழங்கினார். 

 

நடிகை ப்ரீத்தி: இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு நன்கு தமிழ் பேச வரும். இப்படி ஒரு கேரக்டரை உருவாக்கி அதை எனக்கு வழங்கியதற்கு மந்திரமூர்த்தி சாருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

 

இசையமைப்பாளர் ரகுநாதன்: கமர்ஷியல் படங்களுக்கு இசையமைப்பது எளிது. எமோஷனல் படங்களில் இசையும் ஒரு கேரக்டர் தான். பல இடங்களில் அமைதி தான் இசையாக இருக்கும். சில நேரங்களில் வசனங்கள் இல்லாதபோது இசை தான் கதையை நகர்த்திச் செல்லும். கதையைக் கேட்டவுடனேயே இந்தப் படத்திற்கு நாம் அதிகம் வேலை செய்ய வேண்டும் என்பது புரிந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்