
'சண்டக்கோழி 2' படத்திற்கு பிறகு விஷால் தற்போது 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவிஇயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'டெம்பர்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரம் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்கிரின் சீன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே ராகவா லாரான்ஸ்சின் காஞ்சனா 3, சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.