/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/143_4.jpg)
'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
பணப்பிரச்சனை காரணமாக பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படத்தின் படப்பிடிப்புவிரைவில் நிறைவடைந்தாலும், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்தாண்டின் இறுதியில்தான் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதனைக் கவனத்தில் எடுத்த தயாரிப்பு தரப்பு, ‘அயலான்’ படத்தினைகிறிஸ்த்துமஸ் தினத்தன்று திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ளதகவல்சிவகார்த்திகேயன் ரசிகர்களைக் கவலையடைச் செய்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)