ayalan

Advertisment

ஜிவி பிரகாஷ் படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூரைச் சார்ந்த அருண்பிரசாத் மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் பிரம்மாண்ட இயக்குனரின் முன்னாள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜிவி பிரகாஷை வைத்து 4ஜி என்றொரு படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் மறைந்த இயக்குனரின் நெருங்கிய நண்பரும், அயலான் பட இயக்குனருமான ரவிக்குமார் இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிடுகையில்," 'நண்பா என்னை ஹீரோ மாதிரி எடுடா'ன்னு சொன்னியே... உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சியேடா நண்பா! டெய்லி எவ்ளோ பேசியிருப்போம். எத்தனை ஆசைகளை சொன்ன... உன்னோட கனவுகளைல்லாம் காத்துல போயிடுச்சே அய்யோ... என் வெற்றிய உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா. உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறத,போடா டேய்" என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.