Ayalaan second single released

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

Advertisment

இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் என படக்குழு தெரிவித்தது. இப்படத்தில் ஏலியன் கதாப்பாத்திரத்திற்கு சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோவெளியாகியுள்ளது. ‘அயலா அயலா...’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடல், பூமிக்கு வரும் ஏலியனிடம் பூமியைப் பற்றிபற்றி சிவகார்த்தியேன் எடுத்துரைப்பதை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. நரேஷ் ஐயர், ஹிருதய் கட்டானி உள்ளிட்டோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். குழந்தைகள் அதிகம் ரசிக்கும் விதமாக இப்பாடல்அமைந்துள்ளது. விவேக் வரிகளில், ‘சிக்கிபிக்கி பெட்டு குட்டி... ப்ளானட்ஸ் தாண்டி வந்தான்... பாவம் இந்த ஏலிவாசி நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்...’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.