Advertisment

அயலான் படத்தின் புது அப்டேட்

ayalaan audio launch update

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

Advertisment

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் என படக்குழு தெரிவித்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor sivakarthikeyan ayalaan director ravikumar r
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe