ரஜினி வீட்டுக்கு வந்த ஏவிஎம் சரவணன்... விஷயத்தைக் கேள்விப்பட்டு மகிழ்ந்த ரசிகர்கள்!

avm saravanan met rajinikanth

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில்ஷங்கர்தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிவாஜி'. 'ஏவிஎம்ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலாக வசூலித்து திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ரஜினியின்ஸ்டைல்மற்றும்ஆக்ஷன், காதல்,காமெடி,செண்டிமெண்ட்எனபக்காவானமாஸ்கார்ஷியல்படமாக வெளிவந்த இப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில்படக்குழுவினருக்குபாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்இப்படத்தைத்தயாரித்தஏவிஎம்நிறுவனத்தின் தலைவர் சரவணன், அவரது மகன் குகன், மற்றும் பேத்தி அருணா குகன் ஆகியோர்இன்று நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்துரஜினிக்குபூங்கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்மையில் இயக்குநர்ஷங்கர்சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரஜினிகாந்த்தைநேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். படம் வெளியாகி 15 வருடங்கள் கழித்தும்ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'சிவாஜி'யை கொண்டாடி வருகின்றனர்.

ACTOR RAJINI KANTH director Shankar
இதையும் படியுங்கள்
Subscribe