avm release sivaji movie original print

Advertisment

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிவாஜி'. 'ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலாக வசூலித்து திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனாலும் தற்போது வரை ரஜினியின் கேரியரில் மிக முக்கிய படமாக இன்றளவும் இருந்து வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f1115958-bbfa-46ed-9f0e-25f5df9deb7e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_8.jpg" />

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ஏ.வி எம் நிறுவனம் சிவாஜி படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment