'யோவ் இப்படியா பண்ணுவீங்க....' இணையத்தை தெறிக்கவிட்ட 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்'

அவெஞ்சர்ஸ் பட வரிசையின் கடைசி படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி உலகமெங்கும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசுக்காக உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் சமீபத்தில் அமெரிக்காவில் தொடங்கியது.

Avengers

அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதற்கான இணையதளங்கள் அனைத்தும் செயலிழந்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு இணையத்தளத்தை பயன்படுத்தியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்கள் இணையதளங்கள் ஸ்தம்பித்தது. இதையடுத்து ஒரு சில நிமிடங்கள் கழித்து இணையதளங்களில் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சீர் செய்யப்பட்டு ரசிகர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

avengers
இதையும் படியுங்கள்
Subscribe