இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’, உலகம் முழுவதும் இன்று ஏப்ரல் 26ஆம் தேதி திரயரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியாகுவதற்கு முன்பே வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஒரு நாளுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

public review

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த திங்கள் அன்று லாஸ் வேகாஸில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் பிரத்யேக காட்சி முதன் முறையாக போடப்பட்டது. இதை காண பல பிரபலங்களும், அவெஞ்சர்ஸ் ரசிகர்களும் அந்த திரையரங்கில் சூழ்ந்திருந்தனர். கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் டௌனி ஜேஆர், ஸ்கார்லட் ஜொகன்ஸன், கிறிஸ் பிராட், பிரெய் லார்ஸன், ஜெர்மி ரன்னர் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் பிரபலங்கள் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிரத்யேக காட்சியை கண்ட பலரும் ட்விட்டரில் ஆறு முதல் ஏழு முறை கண் கலங்கிவிட்டேன். இதில் மனதை தொடும் காட்சிகள் பல இருக்கின்றன என்று ட்விட்டரில் படத்தை பற்றி தெரிவிக்காமல் படத்தை பாராட்டியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று தமிழக ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்...

“சப்டைட்டிலே இல்லை என்றாலும் இந்த படத்தை ஆங்கிலத்திலேயே பாருங்கள். அதுதான் நல்லது” என்று ஒருவர் தமிழ் டப்பிங்கின் குறையை வெளிப்படுத்தினார்.

“உண்மையான் மார்வெல் ரசிகர்களாக இருந்தால் அவெஞ்சர்ஸ் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீர்கள்” என்று ஒருவர் சொல்கிறார்.

“படத்தில் சிலிர்ப்பூட்டும் விஷயங்கள் பல இருந்தது”

“எக்ஸ்பெக்ட் பண்ணதைவிட அதிகமாக இருக்கிறது”

“அயர்ன் மேனுக்கும், கேப்டன் அமெரிக்காவும்தான் படத்தில் மாஸ் செய்கிறார்கள். கண்கலங்க வைத்துவிட்டார்கள்”

“எமோஷனலா படம் நன்றாக இருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை”

“விஜய் சேதுபதி வாய்ஸ் அயர்ன்மேனுக்கு சுத்தமா ஒட்டவே இல்லை”

“எனக்கு படம் சுத்தமா பிடிக்கவில்லை” என்று ஒருவர் வித்தியாசமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/ZyMYjEuhttI.jpg?itok=0jM5QoD5","video_url":" Video (Responsive, autoplaying)."]}