உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ஃபேன்ஸ் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் தொடக்கம் முதலே வசூலில் வாரிக்குவிக்க தொடங்கியது. வெறும் 11 நாள்களில் டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. அதற்காக டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் மார்வெல் டீமிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதே வேகத்தில் சென்று முதலிடத்தை பிடித்துவிடும் என்று பார்த்தால்ஆனால், அடுத்தடுத்து வெளியான படங்களினால் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் வசூல் குறைந்து பின் தங்கியது. இதனையடுத்து கடந்தமாதம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தற்போது வசூலில் முதலிடம் வந்திருக்கிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்திலிருந்து ஒரு நீக்கபட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பட க்ளைமாக்ஸில் அயர்ன் மேன் இறந்த பின் அந்த இடத்திலேயே மற்ற வீரர்கள் மண்டியிட்டு அயர்ன் மேனுக்கு மரியாதை செய்வது போன்ற காட்சி முதலில் இடம்பெற்றிருக்கிறது. இதன் பின் படத்தொகுப்பில் இந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது. இதை படக்குழு வெளியிட்டுள்ளது.